எஸ்பி வேலுமணி எம்எல்ஏக்கள் உள்பட 16 பேர் மீது வழக்கு
எஸ்பி வேலுமணி எம்எல்ஏக்கள் உள்பட 16 பேர் மீது வழக்கு
கோவை
தி.மு.க அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம்ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தனபால், தாமோதரன், சூலூர் கந்தசாமி மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தொற்று நோயை பரப்பும் வகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட மொத்தம் 16 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.