மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி பரிதாப சாவு

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-12-18 15:05 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள பாரடையூரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது 33). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நா.மூ.சுங்கத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடுமலையில் இருந்து வேட்டைக்காரன்புதூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று மணிகண்டபிரபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டபிரபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.I

மேலும் செய்திகள்