காங்கிரஸ் கட்சியினர் கைது
சிக்கலில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நேற்று, அமேதி நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி எம்.பி. ஊர்வலமாக சென்றார். இதேபோல் நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிக்கலில் இருந்து நாகையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிமாநில செயலாளர் தாகிர், மாவட்ட நிர்வாகிகள் அமிர்தராஜா, காதர், கோபிநாத், உதயசந்திரன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து ெகாண்டனர். சிக்கலில் இந்த ஊர்வலத்தை நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் 20 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.