கிருஷ்ணகிரி ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 1905 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 1905 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-12-18 04:28 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி (வேப்பனப்பள்ளி), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை) உள்பட மொத்தம் 955 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறி கூடியதாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி உள்பட 950 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறி கூடியதாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்