சுரண்டை நகராட்சி ஆணையாளராக லெனின் பதவியேற்பு

சுரண்டை நகராட்சி ஆணையாளராக லெனின் பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2021-12-17 21:58 GMT
கடையநல்லூர்:
சுரண்டை சிறப்புநிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. தமிழக அரசு இதனை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணையிட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வந்தது. இந்த நகராட்சியின் முதல் ஆணையாளராக லெனின் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு பேரூராட்சிகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள லெனினுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்