திருப்பத்தூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Update: 2021-12-17 18:21 GMT
திருப்பத்தூர்

திருப்பததூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இருவரும் குனிச்சி பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 27), செவ்வாத்தூர் பகுதியைச் சேர்ந்த மாது (28) எனக் கூறினர். 

இருவரும் திருப்பத்துார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறினர். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்