காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தம்
குடியாத்தம் பிச்சனூர் வி.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 28). கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் அடிக்கும் தொழிலாளி. இவர் காயத்ரி (22) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை காயத்திரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயத்ரிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.