குடிமங்கலம்,
பெதப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் கோழிப்பண்ணைகள் அமைத்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த ஒரு குரங்கு அட்டகாசம் செய்து வருகிறது.தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை சேதப்படுத்தியும், கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழிகுஞ்சுகளை தூக்கிசெல்வதும், குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே வனத்துறையினர் பெதப்பம்பட்டி பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்கை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.