கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் சாவு

தூசி அருகே கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-17 16:27 GMT
தூசி

தூசி அருகே கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் குளத்தங்கரை தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரின் மகன் தினேஷ் (வயது 23). 

இவர் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று  இரவு 12 மணியளவில் தூசி பஸ் நிறுத்தம் அருகில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக பின்னால் சென்னையில் இருந்து அழிஞ்சல்பட்டு கிராமத்தை நோக்கி வந்த ஒரு கன்டெய்னர் லாரி திடீெரன தினேஷ் மீது மோதியது. 

அதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி ைவத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் தினேஷ் உயிரிழந்தார். 

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்