மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா; ‘பள்ளிக்கு சென்ற மகளை சாம்பலாக தந்து விட்டனர்’ என தாயார் உருக்கம்
பெரும்பாறை அருகே அரசு பள்ளி மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:

பள்ளி மாணவி எரித்து கொலை
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). இவள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றாள். காலை 11 மணிக்கு வகுப்பறையை விட்டு வெளியே சென்ற அவள், திரும்பி வரவில்லை.
பின்னர் சக மாணவிகள் தேடிச்சென்ற போது, விளையாட்டு மைதானத்தில் பிரித்திகா உடல் கருகி கிடந்தாள். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். இதற்கிடையே பிரித்திகா எரித்து கொல்லப்பட்டதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு லாவண்யா ஆகியோர் பெரும்பாறையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். எனினும் இதுவரை மாணவியை எரித்து கொன்றவர்கள் குறித்து துப்புதுலங்கவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
இந்தநிலையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலாகணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் தனபாண்டி, செயலாளர் சபரிநாதன் உள்பட பலர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் மாணவி பிரித்திகாவின் தாயார் பிரியதர்ஷினியும் வந்தார்.
பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி பிரித்திகாவை எரித்து கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாணவியின் தாயார் கண்ணீர்
இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் அங்கு வந்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி மறுத்தனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சிறிது நேரத்தில் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரித்திகாவின் தாயார், எனது மகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினேன். ஆனால் சாம்பலாக கையில் கொடுத்துவிட்டனர். குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது. கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு, மாணவி தீயில் கருகி உயிரிழந்து இருக்கிறாள். அதற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம், வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.