பழனி குளத்து ரவுண்டானாவில் புதிய வேல் சிலை நிறுவப்பட்டது
பழனி குளத்து ரவுண்டானாவில் புதிய வேல் சிலை நிறுவப்பட்டது.
பழனி:
பழனி குளத்து ரவுண்டானாவில் கிரானைட் கல்லால் ஆன வேல் சிலை நிறுவப்பட்டிருந்தது. கடந்த 15-ந்தேதி இரவு சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த கார் டிரைவரான முருகேஷ்வரன் (வயது 24) என்பவர் அந்த வேல் சிலையை உடைத்து சேதப்படுத்தினார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் சேதப்படுத்தப்பட்ட வேல் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று பக்தர்கள், இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி குளத்து ரவுண்டானாவில் நேற்று புதிதாக வேல் சிலை நிறுவப்பட்டது.
அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் பக்தர்கள் வேல் சிலைக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.