போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-12-17 14:03 GMT
தேனி:
தேனி கம்பம் சாலையில் சுப்பன்தெரு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 13-ந்தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த இருதரப்பினர் மோதலில் போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், போலீசார் நடவடிக்கையை கண்டித்தும், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரியும் தேனி அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் உறவின்முறை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாரை கண்டித்தும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்