தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் நமச்சிவாயம் (வயது 29). இவர் திரேஸ்புரம் கடற்கரையில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா விரைந்து சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நமச்சிவாயத்தை பிடித்து, அவரிடம் இருந்து 100கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து நமச்சிவாயத்தை கைது செய்தனர்.