பாப்பிரெட்டிப்பட்டி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-12-17 05:15 GMT
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவ ராஜபாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் வயது 27. இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான பூர்விகா (19) என்பவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது பூர்விகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பூர்விகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூர்விகாவின் தாய் கவிதா தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என்று பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் திருமணமான ஒரு ஆண்டுக்குள் கர்ப்பிணி இறந்துள்ளதால் இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்