மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி
மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி
ஓசூர்:
ஓசூரில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி மசூதி பகுதியில் சென்னை பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
======