கஞ்சா விற்ற வாலிபர் கைது
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார், தாழையூத்து குவாரி ரோடு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பேய் முருகன் (வயது 31) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
x