ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் பட்டாசு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-16 19:59 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பட்டாசு தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சமுத்திரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கலந்துகொண்டு பேசினார். இதனைத்தொடர்ந்து கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், பட்டாசு தொழிலை லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் தற்போது 2 மாதங்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உள்ளனர். எனவே பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முத்துகுமார், ஒன்றிய செயலாளர் சக்கணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்