உடுமலை நகராட்சியில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி உடுமலை நகராட்சியில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-12-16 17:32 GMT
உடுமலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி உடுமலை நகராட்சியில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
நகராட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று விட்ட நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றிற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 9-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலும் வார்டு வாரியாக வெளியிடப்பட்டது.
வாக்காளர்கள்
இதில் உடுமலை நகராட்சி 1-வது வார்டில் 837 ஆண் வாக்காளர்களும், 896 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 2-வது வார்டில் 712 ஆண்களும், 776 பெண்களும், 3-வது வார்டில் 753 ஆண்களும் 769 பெண்களும், 4-வது வார்டில் 954 ஆண்களும், 1,038 பெண்களும், 5-வது வார்டில் 587ஆண்களும், 608 பெண்களும், 6-வது வார்டில் 582 ஆண்களும், 605 பெண்களும், 7-வது வார்டில் 666 ஆண்களும், 703 பெண்களும், 8-வது வார்டில் 896 ஆண்களும், 938 பெண்களும், ஒருஇதரவாக்காளரும், 9-வதுவார்டில் 669 ஆண்களும், 761 பெண்களும், ஒரு இதரவாக்காளரும், 10-வதுவார்டில் 753 ஆண்களும், 849 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர்.
11-வது வார்டு
11-வது வார்டில் 977 ஆண்களும், 1034 பெண்களும், 12-வது வார்டில் 672 ஆண்களும், 708 பெண்களும், 13-வது வார்டில் 1,038 ஆண்களும், 1062 பெண்களும், 14-வது வார்டில் 427 ஆண்களும், 478 பெண்களும், 15-வது வார்டில் 1,692 ஆண்களும், 1,744 பெண்களும், ஒரு இதர வாக்காளரும் , 16-வது வார்டில் 1,092 ஆண்களும், 1,163 பெண்களும், ஒரு இதர வாக்காளரும், 17-வது வார்டில் 818 ஆண்களும், 893 பெண்களும், 18-வது வார்டில் 938 ஆண்களும், 1,055 பெண்களும், 19-வது வார்டில் 855 ஆண்களும், 873 பெண்களும், 20-வது வார்டில் 387 ஆண்களும், 440 பெண்களும், ஒரு இதர வாக்காளரும் வாக்காளர்களாக உள்ளனர்.
21-வது வார்டில் 1,216 ஆண்களும், 1,316 பெண்களும், 2 இதர வாக்காளர்களும், 22-வது வார்டில் 1,042 ஆண்களும், 1,058 பெண்களும், 23-வது வார்டில் 1,206 ஆண்களும், 1,376 பெண்களும், 24-வது வார்டில் 922 ஆண்களும், 959 பெண்களும், 25-வது வார்டில் 578 ஆண்களும், 609 பெண்களும், 26-வது வார்டில் 741 ஆண்களும், 822 பெண்களும், ஒரு இதர வாக்காளரும், 27-வது வார்டில் 695 ஆண்களும், 709 பெண்களும், 28-வது வார்டில் 860 ஆண்களும், 838 பெண்களும், 29-வது வார்டில் 760 ஆண்களும், 775 பெண்களும், 30-வது வார்டில் 714 ஆண்களும், 741 பெண்களும், 31-வது வார்டில் 1,353 ஆண்களும், 1383 பெண்களும், 32-வது வார்டில் 996 ஆண்களும், 1,039 பெண்களும், 33-வது வார்டில் 513 ஆண்களும், 555 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்
33 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரத்து 901 ஆண் வாக்காளர்களும், 29 ஆயிரத்து 573 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 57 ஆயிரத்து 482 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 1,672 பேர் அதிகம் உள்ளனர். இந்த நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 15-வதுவார்டு அதிக வாக்காளர்களை (3,437) கொண்ட வார்டாகவும், 20-வது வார்டு குறைந்த வாக்காளர்களை (828) கொண்ட வார்டாகவும் உள்ளது.
வாக்காளர் பட்டியல் நகராட்சி அலுவலகத்தில், வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சியினர் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
தேர்தல் தொடர்பான பணிகளை உடுமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் மேற்பார்வையில் தேர்தல்பிரிவு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்