பயணி தவறவிட்ட 1½ பவுன் நகையை ஒப்படைத்த கண்டக்டர்
பயணி தவறவிட்ட 1½ பவுன் நகையை கண்டக்டர் ஒப்படைத்தார்.
மானாமதுரை,
பரமக்குடி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் ராமேசுவரம் அரசு பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்து இருந்த 1½ பவுன் நகை தொலைந்து போனது. பின்னர் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் டிக்கெட்டை காண்பித்து நகையை தவற விட்டது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து அவர் சென்ற பஸ் டிரைவர், கண்டக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சில் தேடியபோது பொருட்கள் வைக்கும் இடத்தில் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து மானாமதுரை பஸ் நிலையத்தில் வைத்து கண்டக்டர் பாபு நகையை கோபிநாத்திடம் ஒப்படைத்தார். அப்போது பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்கள், அரசு பஸ் கண்டக்டர் பாபுவை பாராட்டினர்.