இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி:
தேனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி தாலுகா தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் கரண்குமார், சவுந்திரபாண்டியன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.