திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் தவில்-நாதஸ்வரம் கலைஞர்கள் 200 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி மார்கழி மாத பிறப்பையொட்டி நடந்தது
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தவில்-நாதஸ்வரம் கலைஞர்கள் 200 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி மார்கழி மாத பிறப்பையொட்டி நடந்தது.
திருத்துறைப்பூண்டி:-
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தவில்-நாதஸ்வரம் கலைஞர்கள் 200 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி மார்கழி மாத பிறப்பையொட்டி நடந்தது.
பிறவி மருந்தீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலம் ஆகும். இந்த கோவிலில் சிவன் பிறவி மருந்தீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். பெரியநாயகியம்மன், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்கள், தெட்சிணாமூர்த்திக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில் மரகதலிங்கம் இருப்பது சிறப்பம்சம் ஆகும். பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று ‘திருத்துறைப்பூண்டியில் திருவையாறு’ எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
200 பேர் பங்கேற்பு
நிகழ்ச்சியில் 100 தவில் கலைஞர்கள், 100 நாதஸ்வர கலைஞர்கள் என 200 பேர் பங்கேற்று பிறவிமருந்தீஸ்வரர் சன்னதி முன்பாக இசை வாசித்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன், பாரதமாதா சேவை நிறுவனங்களின் இயக்குனர் மணிமாறன், குழந்தைகள் நல மருத்துவர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சர்வாலய உழவாரப்பணி குழு மற்றும் நாட்டியாஞ்சலி பெருவிழா குழுவினர் செய்து இருந்தனர்.