தனியார் நிறுவன ஊழியர் சாவு

தனியார் நிறுவன ஊழியர் சாவு

Update: 2021-12-16 14:47 GMT
சரவணம்பட்டி

சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று காலை கோவை-சத்தி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார்(25) ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்