ஹெலிகாப்டர் பாகங்களை சேகரிக்கும் பணி தீவிரம்

ஹெலிகாப்டர் பாகங்களை சேகரிக்கும் பணி தீவிரம்

Update: 2021-12-16 14:40 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் கடந்த 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மரங்கள் மீது மோதி ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியை ஒட்டி விழுந்தது. 

இதில் சங்கர் என்பவரது வீட்டின் சமையலறை சேதமடைந்தது. இங்குள்ள ஒரு வீட்டில்  விமானப்படையினர் இரவில் தங்கி இருந்து மீதமுள்ள ஹெலிகாப்டர் பாகங்களை சேகரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று ஹெலிகாப்டர் முன் பகுதி, வால், இறக்கை, மோட்டார் போன்ற பகுதிகளை மீட்கும் பணி நடந்தது. எடை அதிகமாகவும், பெரிய பாகங்களாகவும் இருப்பதால் எளிதில் வெளியே கொண்டு செல்ல முடியவில்லை.  இதனால் ஹைட்ராலிக் எந்திரம் உதவியுடன் வெட்டி எடுத்துச் செல்ல பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

சிறிய பாகங்கள் எடுத்து செல்லப்படுகிறது. மேலும் விமானப்படையினர் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா என்று 8-வது நாளாக ஆய்வு செய்து சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதோடு, 3 இடங்களில் தடுப்புகள் வைத்து வெளிநபர்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

மேலும் செய்திகள்