சாத்தூர் நகராட்சி கமிஷனர் மாற்றம்
சாத்தூர் நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர்,
சாத்தூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றிய இளவரசன் காயல்பட்டினம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காயல்பட்டினம் நகராட்சியில் பணியாற்றிய சுகந்தி, சாத்தூர் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.