வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை தவளை கண்டறியப்பட்டது
வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை தவளை கண்டறியப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வெங்கடாஜலபதி நகர் வடக்கு பகுதியில் தலையாட்டி சித்தர் ஆசிரமம் அருகே பாலாஜி நகரில் ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்தியன் பெயிண்டட் என அழைக்கப்படும் அரிய வகை தவளை தென்பட்டது. இதனை கண்டறிந்த பறவைகள் குறித்து ஆய்வு செய்துவரும், வனஉயிர் ஆர்வலர் பாண்டிகண்ணன் கூறுகையில்,
இதன் அறிவியல் பெயர் அப்ரோடன் டப்ரோபான்சிகஸ் ஆகும். மர பொந்துகள், மாசுபடாத ஈர நிலங்கள், ஆற்றங்கரைகளில் வாழும் இயல்புடையது. இந்த வகை தவளைகள் வாழுமிடங்களாக அறியப்பட்டுள்ள இலங்கை தீவு, நேபாளம், வங்காளதேசம், இந்தியாவின் பகுதிகளை கடந்து வந்து பெரம்பலூரில் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டு தெலுங்கானாவின் பெஜ்ஜூர் காப்பு காட்டில் ஒரு முறை தென்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.