ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி

அம்பை தாமிரபரணி ஆற்றில் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.

Update: 2021-12-15 19:48 GMT
அம்பை:
அம்பை தாமிரபரணி ஆற்றில் அம்பை- கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலத்தின் கீழ்ப்புறம் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அம்பை அருகே உள்ள வாகைக்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து (வயது 47) என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. அவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்