புதுக்கடை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-15 19:32 GMT
புதுக்கடை, 
புதுக்கடை அருகே பைங்குளம் துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48). தொழிலாளியான இவருடைய மனைவி கலா (44). விஜயகுமார் மதுகுடித்து விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த கலா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அங்கு விஷம் குடித்த நிலையில் விஜயகுமார் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்