10 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு

10 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிக்கப்பட்டது.

Update: 2021-12-15 17:23 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் உதயசூரியன்(வயது 64). இவர் நேற்று முன்தினம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். திரு.வி.க. நகரில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், உதயசூரியனின் பின்னால் 10 ரூபாய் நோட்டுகளை சிதற விட்டனர். பின்னர் அவர்கள், உதயசூரியனிடம் தங்களது பணம் கீழே கிடப்பதாக கூறினர். உடனே அவரும் குனிந்து, 10 ரூபாய் நோட்டுகளை எடுத்தார். அந்த சமயத்தில் 2 பேரும் உதயசூரியனிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு   மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்