தியாகதுருகம் அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்

தியாகதுருகம் அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்

Update: 2021-12-15 16:36 GMT
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மனைவி ஜெயலட்சுமி(வயது 25). இவர் தற்போது தனது கணவருடன் மும்பையில் வாசினகா பகுதியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் நர்சிங் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான பிரிதிவிமங்கலத்துக்கு வந்த ஜெயலட்சுமி தேர்வை எழுதி விட்டு கடந்த 6-ந் தேதி மும்பை செல்வதற்காக அவரது மாமனார் ராஜியிடம் கூறிவிட்டு தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் இதுவரை மும்பைக்கு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமான ஜெயலட்சுமியை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்