தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த தொழிலாளி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த தொழிலாளியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-12-15 15:38 GMT
தேனி: 

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது நுழைவு வாயிலில் நின்ற போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனையிட்டனர். அப்போது அவர் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் தீக்குளிக்க பெட்ரோல் கொண்டு வந்ததாக கூறினார். 


பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்த போது, தன்னை பூதிப்புரத்தை சேர்ந்த ஒருவர் 2 நாட்களுக்கு முன்பு தாக்கியதாகவும், இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோலுடன் வந்ததாகவும் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் விசாரணைக்காக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்