பீர்பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு கைது

சுரண்டை அருகே பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-14 21:31 GMT
சுரண்டை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜகுரு. இவர் நேற்று முன்தினம் மாலையில் சேர்ந்தமரம் வடக்கு புறத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த பாக்கியசாமி மகன் ராஜ் என்பவரை, பார் விற்பனையாளரிடம் ஆம்லெட் வாங்கிவர கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுக்கவே ராஜகுரு ஆத்திரம் அடைந்து கையில் பீர் பாட்டிலுடன் அவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசில் ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜகுருவை கைது செய்தார். மேலும், போலீஸ் ஏட்டு பீர்பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்