கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 45). இவர் போலியான ரசீது சீட்டு தயாரித்து கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் ஏற்று வெங்கடாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை போலீசார் நேற்று சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.