கண்மாயில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் சாவு
அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 48). இவர் கோவிலாங்குளம் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கோவிலாங்குளம் செவக்கண்மாயில் குளிக்கச்சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோனைமுத்துவின் மனைவி மகாலட்சுமி (40) அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.