தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

வடகாடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-14 19:00 GMT
வடகாடு 
வடகாடு அருகே உள்ள அனவயல் பகுதியில் புள்ளான்விடுதியை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அப்துல் மாலிக் என்பவர் வாங்கி விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். போலீசாரை கண்டதும் அப்துல் மாலிக் மற்றும்  வியாபாரி ஆகிய இருவரும் புகையிலை பொருட்கள் இருந்த மூட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
 அதனை போலீசார் கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 30 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.64 ஆயிரம் இருக்கும் என்று தெரிய வந்தது.
ஒருவர் கைது
 இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வந்த நிலையில் நேற்று மாலை தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா, ஆவணம் கைகாட்டியை சேர்ந்த அப்துல் மாலிக்கை(வயது 64) போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மொத்த வியாபாரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்