சிவகங்கையில், மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-14 18:58 GMT
சிவகங்கை,

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இன்னாசி ராஜா, கவுரவ தலைவர் மாணிக்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட துணைச்செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்ட துணைத்தலைவர் மலர்விழி மற்றும் கொங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

100 பேர் கைது

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கபூபதி, நிர்வாகிகள் செந்தில், உலகநாதன், செய்யது அலி, ராமமூர்த்தி, மனோகரன், கருப்புசாமி, வைரமணி, பூமிநாதன், மற்றும் 40 பெண்கள் உள்பட 100 பேரை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்