வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2021-12-14 18:20 GMT
குலசேகரம், 
குலசேகரம் அருகே உள்ள அரியாம்பகோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 21). இவர் குலசேகரம் அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனை இவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டாலின் தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘என்னை இனி யாரும் தேட வேண்டாம்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதை கேட்ட சகோதரி அதிர்ச்சி அடைந்து மீண்டும் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஸ்டாலின் ஆனப்பாறை பகுதியிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்