அரக்கோணத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம்
அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.பி.எம். சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து ெகாண்டவர்கள் ஆந்திரா, தெலுங்கானாவில் அந்த மாநில அரசுகள் வழங்குவதை போல தமிழ்நாட்டிலும் ஊனமுற்றோருக்கு ரூ.3 ஆயிரம் அதிகளவில் பாதிக்கப்பட்ட ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடு என வலியுறுத்தி கோஷமிட்டனர்.