நாமக்கல், ராசிபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ராசிபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2021-12-14 17:23 GMT
ராசிபுரம்:
பருத்தி ஏலம்
ராசிபுரம் அருகே உள்ள வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துகாளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து கலந்து கொண்டனர். 
ஏலத்தில் 2 ஆயிரத்து 58 பருத்தி மூட்டைகள் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 889 முதல் ரூ.9 ஆயிரத்து 491 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 9 முதல் ரூ.12 ஆயிரத்து 769 வரை ஏலம் போனது.
நாமக்கல்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2 ஆயிரத்து 700 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.68 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 360 முதல் ரூ.9 ஆயிரத்து 109 வரையும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 219 முதல் ரூ.11 ஆயிரத்து 89 வரையும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 999 முதல் ரூ.5 ஆயிரத்து 649 வரையும் ஏலம் போனது. 
நாமக்கல், ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

மேலும் செய்திகள்