போடி அருகே சினிமா படப்பிடிப்பு நடிகர் யோகிபாபு உதவியாளர் மீது தாக்குதல் டிரைவர் மீது வழக்கு

போடி அருகே சினிமா படப்பிடிப்பின்போது நடிகர் யோகிபாபு உதவியாளரை தாக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-14 15:57 GMT
போடி:
போடி அருகே உள்ள குரங்கணி மற்றும் கொட்டக்குடி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக ‘மலையோரம் வீசும் பூங்காற்றே’ என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக சேலத்தை சேர்ந்த சதாம்உசேன்(வயது 35) உள்ளார். 
இந்நிலையில் நேற்று மாலை சதாம்உசேனை யோகிபாபுவின் கார் டிரைவரான சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன் (31) ஆபாசமாக திட்டி, கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சதாம்உசேனின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து அவர் குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்