தகவல் பலகை வைக்க அனுமதிக்க வேண்டும்

தகவல் பலகை வைக்க அனுமதிக்க வேண்டும்

Update: 2021-12-14 15:27 GMT
திருப்பூர், 
அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் கிளையை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் செயல்படுகிறது. பணியாற்றும் அலுவலகம் முன் கொடிக்கம்பம், தகவல் பலகை வைக்க தொழிற்சங்க சட்டவிதிகளின்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோட்டில் பணிமனை முன் வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்க கொடிக்கம்பங்களையும், தகவல் பலகையையும் நேற்றுமுன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும்பணியில் ஈடுபட்டனர். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டுள்ளன. அமைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டவை. தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை மற்றும் கொடிக்கம்பங்களை இடையூறு இல்லாமல் தொடர்ந்து வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்