2 கடைகளின் பூட்டை உடைத்து 20½ லட்சம் திருட்டு

2 கடைகளின் பூட்டை உடைத்து 20½ லட்சம் திருட்டு

Update: 2021-12-14 14:03 GMT

கோவை

காந்திபுரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.20½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

செல்போன் உதிரிபாகங்கள்

கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. 

இங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதாப், ராஜூ ஆகியோர் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் உள்ள வணிக வளாகத்தில் கணபதி, அம்பே ஆகிய செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். 

நள்ளிரவில் 2 கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். 

அவர்கள், அந்த கடைகளில் இருந்த பணம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். 

ரூ.20½ லட்சம் திருட்டு

பிரதாப், ராஜூ ஆகியோர் நேற்று காலை கடைகளை திறக்க சென்ற னர். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் திருட்டு போய் இருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இதில் அம்பே கடையில் ரூ.20 லட்சமும், கணபதி கடையில் ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

விசாரணை

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வை ஆய்வு செய்தனர். 

அப்போது கேமராவில் காட்சிகளை பதிவு செய்யும் "ஹார்ட் டிஸ்க்கை" மர்ம ஆசாமிகள் தூக்கிச்சென்றது தெரிய வந்தது. 

எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த திருட்டு தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


கடைகளின் பூட்டை உடைத்து ரூ.20½ லட்சம் திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்