கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்
கழுகுமலை:
கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.
வாலிபர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தோணுகால் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரிய சீனிபாண்டி மகன் ராஜூ (வயது 37). அவரும், அவரது உறவினரான பெரிய ராமர் மகன் ராமகிருஷ்ணன் (43), அதே ஊரைச் சேர்ந்த பரமன், ஆனந்த் ஆகிய 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் நேற்று முன்தினம் கோவில்பட்டிக்கு வந்தனர்.
அங்குள்ள ஒரு ஷோரூமில் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் கரடிகுளம் அருகே உள்ள சி.ஆர். காலனி பகுதி கொக்குளம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, ராஜூ ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலை தடுமாறி ஓடியதால், அதிலிருந்து அவர் கீழே விழுந்தார்.
சாவு
இதில் பலத்த காயமடைந்த ராஜூவை உடன் வந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிைலையில், மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ராஜூ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.