கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு ஒத்திகை
கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடலோரத்தில் மத்திய அரசு நிறுவனமான சென்னை அணுமின்நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு அணுசக்திதுறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சென்னை அணுமின் நிலையம் மட்டும் அணுவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து நாட்டுக்கு வழங்கிவருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் அமைந்துள்ள சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம் உட்பட சுற்றுப்புற கிராம மக்களிடையே நீண்டகாலமாக அணுக்கதிர்வீச்சு உள்ளது என்ற அச்சம் இருந்து வருகிறது.
இதனைப் போக்க அணுசக்திதுறை நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களிடையே பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறது. கடந்த மாதம் நடக்க இருந்த ஒத்திகை கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர நிலை பாதுகாப்பு ஒத்திகை அணுசக்திதுறை வளாகத்தில் நடைபெறுகிறது.