ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்-கலெக்டரிடம் மனு

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்-கலெக்டரிடம் மனு

Update: 2021-12-13 20:44 GMT
மதுரை
மதுரை ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் முறியடிப்புக்குழு, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் பொதுமக்களின் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அதன்பின் அதில் 25 ஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்பட வில்லை. இந்த வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி இந்த வழக்குகள் அனைத்தையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்