இரும்பு கம்பி குத்தி தொழிலாளி சாவு

இரும்பு கம்பி குத்தி தொழிலாளி சாவு

Update: 2021-12-13 20:39 GMT
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் குடியிருந்து வந்தவர் நாகேந்திரன்(வயது 40). தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்தநிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்லாடம்பட்டி மந்தையில் ஜெயம் என்பவரின் கறிக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அவர் தனது இருசக்கர வாகனத்தின் இரும்புக்கம்பியின் ஒரு பகுதியை பிடித்தபோது வண்டி கீழே விழுந்ததில் அதில் கட்டியிருந்த தென்னை மரம் ஏறும் மிஷினில் இருந்த இரும்பு கம்பி நாகேந்திரன் வலதுபக்க தாடையில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக 108 மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்