ஆரப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காணரமாக ஆரப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-12-13 20:37 GMT
மதுரை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காணரமாக ஆரப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
மதுரை ஆனையூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சங்கீத் நகர், சஞ்சீவி நகர், ஆனையூர் மெயின் ரோடு, செல்லையா நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை, குட்ஷெட் தெரு, அன்பு நகர், அசோக் நகர், அப்பாத்துரை நகர், மல்லிகை நகர், ஆபீசர் டவுன், சிலையனேரி, வைகை அப்பார்ட்மெண்ட், பிரசன்னா காலனி, கூடல்புதூர், கருப்பசாமி நகர், இந்திரா நகர், திருமால் நகர், பாண்டியன் நகர், கரிசல்குளம், தினமணி நகர், ரம்ராஜ் காட்டன், நம்மாழ்வார் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
இதுபோல் மதுரை அ.வல்லாளப்பட்டி, மேலவளவு, திருவாதவூர் துணை மின் நிலையங்களில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, அ. வல்லாளப்பட்டி, தர்மதானபட்டிப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
ஆரப்பாளையம்
மேலும், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசரடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சம்மட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக் நகர் 4 முதல் 16 தெரு வரை, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குசலை, வா.உ.சி. மெயின் ரோடு, இ.பி. காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், பாரதி நகர், ஞனஒளிவுபுரம், விசுவாசபுரம், ஆரப்பாளையம் பஸ் நிலையம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி பகுதி ஏரியா, பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி, நாராயண தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மத்திய சிறைச்சாலை குடியிருப்பு, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்