மதனகோபாலசுவாமி கோவிலில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா

மதனகோபாலசுவாமி கோவிலில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

Update: 2021-12-13 20:34 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று மாலை உற்சவ பெருமாள் நாச்சியார் திருக்கோலமான மோகினி அலங்காரத்துடன் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் திறக்கப்பட்டது. இன்று இரவு 7.30 மணியளவில் வெள்ளி கருட சேவை நடக்கிறது. ராப்பத்து உற்சவம் வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சொர்க்கவாசல் திறப்பினை காணவரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்