சிறுமியை திருமணம் செய்த டிரைவர் கைது
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 25). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கும், 17 வயது வயது சிறுமிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தற்போது அந்த பெண்ணுடன் பிரபாகரன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார். இது குறித்து அந்த பெண் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து ஐ.ஜி. உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமணம் செய்ததாகவும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக இரு குடும்பத்தினரை சேர்ந்த 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.