புனித அந்தோணியார் ஆலயத்தில் திருட்டு
புனித அந்தோணியார் ஆலயத்தில் திருட்டு
திங்கள்சந்தை,
கருங்கல் அருகே அணஞ்சிகோடு என்ற பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர் யாரோ உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.2 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து துண்டத்துவிளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜாண் ராஜேந்திரன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.