சங்கராபுரத்தில் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
சங்கராபுரத்தில் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அரவிந்தன்(வயது 24). கள்ளக்குறிச்சி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் சம்பத்தன்று வீட்டில் இருந்தபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரவிந்தனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். கடந்த ஒரு வருடமாக இடுப்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அரவிந்தன் வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.